vanangaan and indian 2 [file image]
வணங்கான் : கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வணங்கான்’. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே, படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதிக்காக தான் ரசிகர்கள் ஆர்வத்து காத்து இருந்தனர். ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்து இருக்கிறது.
அது என்னவென்றால், வணங்கான் படத்தை வரும் ஜீலை மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இன்னும் தேதி முடிவாகவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறதாம். தேதி முடிவான பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த சூழலில், பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் படமும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால் ஒரு வேலை இரண்டு படமும் ஒரே தினத்தில் வெளியாகுமா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…