சினிமா

உருவாகிறது இந்தியன் 3! கமல்ஹாசன் எத்தனை நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளார் தெரியுமா?

Published by
பால முருகன்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், பாபிசிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையாய்ப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தியன் 2 படத்தின் புது அப்டேட்! அனல் பறக்க வரப்போகும் “கிளிம்ப்ஸ்”.

இந்த இரண்டாவது பாகத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தியன் திரைப்படத்தின் 3 -வது பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  ஏனென்றால், 2-வது பாகத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கிறதாம்.

எனவே, 2-வது பாகத்தின் நீளம் கருதி படத்தின் மூன்றாவது பாகத்தில் காட்டலாம் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். எனவே, இந்த 3-வது பாகத்தில் நடிப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இதனால் அந்த 40 நாட்களில் 3-வது பாகத்திற்கான காட்சிகளை எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை அதற்குள் மூன்றாவது பாகம் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும்,  இந்தியன் 2 படத்திற்கான புது வீடியோ ஒன்று வரும் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் இந்தியன் 2 படத்தில் இருந்து அப்டேட் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago