உருவாகிறது இந்தியன் 3! கமல்ஹாசன் எத்தனை நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளார் தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், பாபிசிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையாய்ப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தின் புது அப்டேட்! அனல் பறக்க வரப்போகும் “கிளிம்ப்ஸ்”.
இந்த இரண்டாவது பாகத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தியன் திரைப்படத்தின் 3 -வது பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால், 2-வது பாகத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கிறதாம்.
எனவே, 2-வது பாகத்தின் நீளம் கருதி படத்தின் மூன்றாவது பாகத்தில் காட்டலாம் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். எனவே, இந்த 3-வது பாகத்தில் நடிப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இதனால் அந்த 40 நாட்களில் 3-வது பாகத்திற்கான காட்சிகளை எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 திரைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை அதற்குள் மூன்றாவது பாகம் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும், இந்தியன் 2 படத்திற்கான புது வீடியோ ஒன்று வரும் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் இந்தியன் 2 படத்தில் இருந்து அப்டேட் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது .