வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, ரிலீஸ் குறித்து இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில், இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்த அவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இயக்குநர் மற்றும் அருண் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது, படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார், சமுத்திரக்கனி மற்றும் மிஸ்கின் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் மேற்கொள்ளும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் மாதம் குறித்து அறிவித்தாலும், தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் ‘இந்தியன் 2’ படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டும் ஒரே தேதியில் வெளியாகுமா அல்லது வெவ்வேறு தேதிகளில் வெளியாகும் என்பது இனிமேல் தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்தியன் 2 படக்குழு ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…