இந்தியன் 2 படத்தின் புது அப்டேட்! அனல் பறக்க வரப்போகும் “கிளிம்ப்ஸ்”.

#Indian2

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, குல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த படத்தின் முதல் பாகம் 1996-ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றியடைந்தது. இதனையடுத்து, இந்த இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என படக்குழு மும்மரமாக வேலை செய்து வருகிறது.

இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படக்குழு இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் முன்னதாக தகவல்கள் பரவியது.

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் படத்திற்கான புது அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் படத்தில் இருந்து என்ன அப்டேட் வெளியாகும் என்று குழப்பத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில், முன்னதாக அறிவித்ததை போல தற்போது இந்தியன் 2 படத்தில் இருந்து அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, படத்திற்கான புது அறிமுக “கிளிம்ப்ஸ்” வீடியோ  ஒன்று வரும் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் அதற்கு முன்னதாக இந்த அப்டேட் வெளியாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்