இந்தியன் 2 படத்தின் “நீலோர்பம்” பாடலின் ப்ரோமோ வெளியீடு.!

Neelorpam - indian 2

இந்தியன் 2 : திரைப்படத்தின் 2 வது பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 2ஆவது சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்திருந்த படி, பாடலின் ப்ரோமோ வெளியானது. “நீலோர்பம்” என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு கவிஞர் தாமரை வரிகள் எழுத, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் மனதை உருக வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சித்தார்த் ஊழலுக்கு எதிரான போராட்ட வீரராக நடித்திருப்பதாக கூறப்பட்டாலும், இந்த பாடலை வைத்து பார்க்கையில், சிக்கலான காதல் கதைக்களத்தை விவரிக்கிறது.

இப்படம் ஜூலை 12இல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதால், புரமோஷனுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து தற்பொழுது இரண்டாம் சிங்கிள் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் தவிர, நடிகை காஜல் அகர்வால், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்