Indian 2: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் -2” திரைப்படம் ஜூன் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று தகவல் வெளியானது.
தற்போது, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் சில பெரிய திரைப்படங்கள் வெளியாகிறது. அதன்படி, தங்கலான், வேட்டையன், விடுதலை 2, சீயான் 62 மற்றும் சர்தார் 2 உள்ளிட்ட படங்கள் ஜூன் மாதங்களில் வெளியாகிறது. இப்பொழுது, இந்தியன் 2 திரைப்படமும் அந்த பந்தயத்தில் இணைந்துள்ளது.
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்த்தில் ஊழலுக்கு எதிராக போராடும் சேனாபதியாக கமல்ஹாசன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…