100 கோடி வசூலை தொட முடியாமல் தவிக்கும் இந்தியன் 2! ஷங்கர் படத்துக்கு இந்த நிலைமையா?
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் இந்தியன் முதல் பாகம் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்த்து மக்கள் படம் பார்க்க சென்ற நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று படம் பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படம் எதிர்பார்த்த அளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறாமல் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு இருக்கிறது.
படம் மிகவும் நீளமாக இருப்பதாக மக்கள் பலரும் கூறி வந்த நிலையில், படத்தில் 20 நிமிட காட்சிகளை நீக்கி விட்டு படம் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் எதிர்பார்த்த அளவுக்கு படத்தின் வசூல் வரவில்லை என்றே சொல்லவேண்டும்.
ஏனென்றால், இந்த படத்திற்கு முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. ஆனால், இந்தியன் 2 படத்தால் இரண்டு நாளில் 100 கோடி வசூலை நெருங்க முடியவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, பாக்ஸ் ஆபிஸ் குறித்த விவரங்களை வெளியிடும் பிரபல இணையதளமான (sacnilk) கொடுத்த தகவலின் படி, இந்தியன் 2 திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் இந்தியா முழுவதும் முதல் நாளில் 25.6 கொடியும், இரண்டாவது நாளில் 16.7 கோடிகள் என மொத்தம் 42.3 கோடிகளை வசூல் செய்துள்ளது எனவும், தமிழில் மட்டும் 29.5 கோடிகள், இந்தியில் 2.4 கோடிகள், தெலுங்கில் 10.4 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்தியன் 2 திரைப்படம் உலக அளவில் வெளியான இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 80 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளாதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தால் கண்டிப்பாக இதற்கு மேலே வசூல் செய்து இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.