இந்தியன் 2 : இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ளார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜீலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர் பாபி சிம்ஹா சமீபத்தில் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ” இந்தியன் 2 திரைப்படம் அருமையாக வந்து இருக்கிறது. நாம் இப்படி தான் இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு வைத்து இருப்போம் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு படம் இருக்கும். படம் முடியும் போது கண்டிப்பாக கண்கலங்கி அழுவீர்கள்.
இரண்டாவது பாகமே இப்படி இருக்கிறது என்று நான் உறுதியாக சொல்கிறேன் என்றால் அத்துடன் மூன்றாவது பாகம் வேற வேற லெவலில் இருக்கும். கண்டிப்பாக நீங்கள் படத்தை பார்க்க தானே போகிறீர்கள். ஷங்கர் சார் எடுத்த கதைகளமாக இருக்கட்டும் அவருடைய மேக்கிங் ஆக இருக்கட்டும் எல்லாமே வேற லெவலில் இருக்கும்” எனவும் பாபி சிம்ஹா கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…