விக்ரம் வசூலை தொட முடியாத இந்தியன் 2! முதல் நாளில் எவ்வளவு தெரியுமா?
இந்தியன் 2 : கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே முதல் பாகம் வெளியாகி பெரிய ஹிட் ஆகி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருந்த நிலையில், இரண்டாவது பாகமும் அதைப்போலவே இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், படம் சற்று எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துக்கொண்டு வருகிறது. இருப்பினும், படத்தை முதல் நாளில் பார்க்க டிக்கெட் புக்கிங் மும்மரமாக நடைபெற்று புக்கான நிலையில், படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியன் 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ. 17 கோடி எனவும், தெலுங்கில் ரூ.7.9 கோடி, இந்தியில் 1 கோடி என வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எதிர்மறையான விமர்சனங்களை படம் சந்தித்தாலும் கூட இந்த ஒரு வாரம் படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியன் 2 படம் முதல் நாளில் இந்தியாவில் 26 கோடி வசூல் செய்திருந்தாலும் இதற்கு முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் முதல் நாளின் வசூலை முறியடிக்க தவறியுள்ளது. விக்ரம் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் 32 கோடி வசூல் செய்திருந்தது. (தமிழில் ரூ. 29 கோடி, தெலுங்கில் ரூ. 2.8 கோடி என வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.