தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் சிறந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது.
இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தேசியவிருதுகள் மட்டுமின்று பல விருதுகளை குவித்து வருகிறது. இவர் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் படங்கள் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ரசிகர்களையும் கவர்கிறது.
தமிழில் மட்டும் இல்லாமல் வெற்றிமாறனுக்கு தெலுங்கு, ஹிந்தி போன்ற பகுதிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. இந்த நிலையில் வெற்றிமாறன் குறித்து பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்கள்.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் தற்போது “ஆர்ஆர்ஆர்” என்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக நாளை இந்த படம் வெளியாகவுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரனிடம் தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது…அதற்கு பதிலளித்த இருவரும் ” வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்கவேண்டும்…கமர்ஷியல் கதையை மிகவும் சிறப்பாக இயக்குகிறார்..அசுரன் திரைப்படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்..நாங்கள் தமிழில் படம் நடித்தால் அது நிச்சயம் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமாகத்தான் இருக்கும்” என கூறியுள்ளனர்.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…