சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார்.
சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அந்த காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் ரிஸ்க் எடுத்து தான் அந்த காட்சிகளில் நடிப்பார்கள். ஒரு சில சமயங்களில் ரிஸ்க் எடுக்கும்போது அவர்களுக்கு காயம் ஏற்பட்டுவிடும் சில சமயங்களில் ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து விடுவார்கள்.
அப்படி தான் நடிகர் விஜய் கில்லி படத்தில் நடித்த போது பாம் பிளாஸ்ட் ஸ்டண்ட் காட்சியில் இருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்தாராம். கில்லி படத்தில் விஜய் த்ரிஷாவை காப்பற்றி கொண்டு செல்லும்போது அவரை பிடிக்க முத்துப்பாண்டி ஆட்கள் எல்லாம் பின்புறம் நிறைய காரில் துரத்தி கொண்டு வருவார்கள். அப்போது விஜயின் கார் பின்பு பாம் பிளாஸ்ட் ஒன்றும் நடக்கும்.
அந்த காட்சி எடுக்கப்படுவதற்கு முன்பு ஸ்டண்ட் இயக்குனர் பாம் பிளாஸ்ட் தூக்கி அடிப்பவரிடம் விஜயின் கார் போன 10 நொடிகளுக்கு பிறகு தான் நீங்கள் அடிக்கவேண்டும் என்று கூறியிருந்தாராம். ஆனால், 10 நொடிகளுக்கு முன்னதாகவே அந்த நபர் விஜயின் காருக்கு பின்பு பாமை தூக்கி எறிந்துவிட்டாராம்.
இதனால் காருக்குள் இருந்த நடிகர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் மிகவும் அதிர்ச்சியாகி விட்டார்களாம். அது மட்டுமின்றி இன்னும் விரைவாக அடித்து இருந்தால் காரில் இருந்த இருவருக்குமே அடிபட்டு இருக்கும் ஜஸ்ட்மிஸ்ஸில் தப்பித்தார்களாம். அந்த காட்சி எடுத்துமுடித்த பிறகு சற்று பயத்துடன் என்ன மாஸ்டர் இப்படி நான் பயந்துவிட்டேன் என்று விஜய் கேட்டாராம். அதற்கு மாஸ்டர் நடந்த விஷயத்தை கூறி இனிமேல் இதுபோன்று நடக்காது என்று கூறினாராம். இந்த தகவலை கில்லி படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஆக பணியாற்றிய ராக்கி ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…