இந்தியன் 2, 3-யில் கமலுக்கு இத்தனை கெட்டப்-ஆ? ஆண்டவர்னா சும்மாவா..!

கமல்ஹாசன்: அடுத்த மாதம் ஜூலை -12 ம் தேதி இந்தியன் -2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. லைகாவின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், அனிருத்தின் அதிரடியான இசையில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் என நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரு எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அந்த ட்ரைலரில் நாம் கூர்ந்து கவனித்தால் நடிகர் கமல்ஹாசன் பல கெட்டப்பில் வந்து அசத்தி இருப்பார். இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் மட்டும் இவர் 7 கெட்டப் அணிந்து நடித்திருக்கிறார் என தகவல்கள் தெரிகிறது.
அதே போல இந்த படக்குழு இந்தியன்-2 படத்தின் ஷூட்டிங் பொழுதே இந்தியன் திரைப்படத்தில் 3 -வது பாகமும் வெளியாகும் என தெரிவிரிந்தது. அதன்படி கமல்ஹாசன் இந்தியன் 2 வை தவிர்த்து, இந்தியன்-3 திரைப்படத்தில் மேலும் 5 புதிய கெட்டப் போட்டு நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் படக்குழு வெளியிடவில்லை என்றாலும் படக்குழு அதனை சர்ப்ரைஸ்காக மறைத்து வைத்திருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். மேலும், இப்படி இந்த வயதிலும் பல கெட்டப்பில் நடித்து அசத்தும் கமல்ஹாசனை புகழ்ந்தும் இணையத்தில் பேசி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025