என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Nayanthara about billa

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு,  உள்ளிட்ட  பலருடைய நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படம் தான் பில்லா. தமிழ் சினிமாவில் வெளியான ஸ்டைலிஷ் ஆன கேங்ஸ்டர் படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அந்த சமயமே ஹிட் ஆனது என்றே கூறலாம்.

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஸ்டைலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைப்போல, படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நயன்தாராவும் இதுவரை இல்லாத விதமாக மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு நடித்திருப்பார். இவர்கள் இருவருக்குமே தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்த படம்.

read more- இனிமே அவர் சொன்னா தான் நடிப்பேன்! சூர்யா போட்ட முக்கிய கண்டிஷன்?

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா பில்லா படத்தில் நடித்ததற்காக காரணத்தை மனம் திறந்து பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பில்லா திரைப்படம் என்னுடைய வேறுபரிமாணத்தை கட்டிய படம். இந்த திரைப்படத்தை நான் என்றுமே மறக்கவே மாட்டேன். ஏனென்றால், இந்த படமும் என்னுடைய விழாவில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இந்த திரைப்படத்திற்கு முன்னதாக நான் கிராமத்தில் இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடித்து கொண்டு இருந்தேன். பில்லா படம் தான் நான் முழுவதுமாக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிக்க முக்கிய காரணமே என்னால் இந்த மாதிரியான கவர்ச்சியான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை தெரியப்படுத்ததான். இதன் காரணமாக தான் நான் பில்லா படத்தில் நடித்தேன்” எனவும் நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

read more- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்? 

மேலும், பில்லா திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளை கடந்த நிலையிலும், இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இதன் காரணமாக படம் அடிக்கடி ரீ-ரிலீஸ் செய்யப்படும் வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கூட படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்