பூர்ணிமா கூட பேசாதற்கு காரணம் இது தான்! உண்மையை உடைத்த இந்துஜா!

Indhuja Ravichandran about Poornima Ravi

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. இவர் அடிக்கடி வீட்டிற்குள் சர்ச்சையில் சிக்கி வந்தாலும் கூட இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். பூர்ணிமா  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்ததன் மூலமும் பிரபலமான ஒருவர்.

அது மட்டுமின்றி இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் இந்துஜா ரவிசந்திரன் உடைய நெருங்கிய தோழியும் ஆவார். இருவரும் ஒன்றாக தான் கல்லூரியில் படித்து வந்தார்கள். பிறகு சினிமா துறையில் நடிக்க இந்துஜாவுக்கு வாய்ப்பு வந்தததும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருக்கிறார்.

காதலியை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி! திருமண கிளிக்ஸ் இதோ!

இதற்கிடையில், அவர் பார்க்கிங் படத்தில் நடித்து முடித்து படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்துஜா கலந்துகொண்டார். ஆனால், அவருடைய நெருங்கிய தோழியான பூர்ணிமாவிடம் கொஞ்சம் கூட மனம் திறந்து பேசாமல் படத்தை மற்றும் பேசிவிட்டு வீட்டில் உள்ளவர்களின் நலத்தை விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை எதற்காக பூர்ணிமா கூட இந்துஜா பேசவில்லை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தது. இந்துஜா தன்னிடம் பேசாத காரணத்தால் பூர்ணிமா மிகவும் வருத்தமும்பட்டுக்கொண்டு இருந்தார். இதனையடுத்து, பூர்ணிமாவிடம் எந்த காரணத்துக்காக பேசவில்லை என்ற தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றின் போது நடிகை இந்துஜா கூறியுள்ளார்.

மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?

இது குறித்து பேசிய நடிகை இந்துஜா ” நான் பிக் பாஸ் வீட்டிற்குள் ப்ரோமோஷனுக்காக சென்றேன். எனவே, பூர்ணிமா எனக்கு நெருங்கிய தோழி என்ற காரணத்தால் அவருக்கு பேவரைட்டாக நான் பேச கூடாது என்று சில விதிமுறைகளை கூறி தான் எங்களை வீட்டிற்குள் விட்டார்கள். மற்றபடி வேறு எதுவும் எங்களுக்குள் பெரிய பிரச்சனை இல்லை.

பொதுவாகவே நாங்கள் இருவரும் ஆண்டிற்கு ஒருமுறை அப்படி தான் பேசிக்கொள்வோம். நானும் அவளும் ஒரே கல்லூரியில் படிக்கும்போது நல்ல நட்பு ஏற்பட்டது. அவர் தற்போது பிக் பாஸ் விளையாடி வரும் விதம் நன்றாக இருக்கிறது. அவள் நன்றாக வரவேண்டும் அது தான் என்னுடைய ஆசை” எனவும் நடிகை இந்துஜா ரவிசந்திரன் தெரிவித்துள்ளார். இதன், மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia
Seethalakshmi - NOTA
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer
prison break rashid khan
Rahul gandhi - Thirumavalavan - Arvind Kejriwal