பாலா கூட முரண்பாடு.. பிரிவுக்கு காரணம் இது தான்! மனம் திறந்த இயக்குனர் அமீர்!
மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனர் பாலாவிடம் நந்தா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு தான் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இருவரும் படங்களை இயக்குவதற்கு முன்பே சென்னைக்கு ஒன்றாக தான் சினிமாவில் படங்களை இயக்க வந்தார்கள்.
அதில் இயக்குனர் பாலா குறுகிய காலத்திலே நல்ல படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார். அமீர் மௌனம் பேசியதே படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் பருத்திவீரன் படம் அவருக்கு வெளியானது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு அமீரும் முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார். இருவரும் ஒன்றாக சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுவிட்டது.
எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!
இதனால் இருவரும் பேசிக்கொள்ளவும் கூட இல்லை இந்த தகவல் அந்த சமயத்தில் இருந்தே பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. இருவருக்கும் இடையே என்னதான் பிரச்சனை எதற்காக பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்? என்று கேள்விக்குறி இருக்கும் நிலையில், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பாலாவுக்கு தனக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” நானும் பாலாவும் ஒன்றாக தான் சினிமாவுக்கு வந்தோம். என்னைப்போலவே அவரும் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டு சேது படத்தை இயக்கியதன் மூலம் பிரபாலமாகிவிட்டார். அந்த படத்திலும் நான் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன் பிறகு அவர் சூர்யாவை வைத்து இயக்கிய நந்தா திரைப்படத்திலும் உதவி இயக்குனராக இருந்தேன்.
கிட்டத்தட்ட நந்தா திரைப்படம் 70 % முடிந்த நிலையில், எனக்கும் பாலாவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுவிட்டது. அதற்கு காரணமே அவருக்கு வேண்டுமானால் நாம் மதிப்பு கொடுக்கலாம். அதனை தாண்டி அவர் கை காமிக்கும் ஆட்களுக்கு என்னால் மதிப்பு கொடுக்க முடியாது எனவே, நாம் இனிமேல் இந்த இடத்தில் இருந்தால் சரியாக இருக்காது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
இருந்தாலும் நான் அப்படியே ஒதிங்கிகொண்டாலும் நந்தா படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். எனவே என்னுடைய பெயர் அதில் வரும் என்று எதிர்பார்த்தேன் அதில் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை அதைப்போல உதவி இயக்குனர்கள் என்ற முறையில் ஆவது என்னுடைய பெயர் வரும் என்று நினைத்தேன் அங்கும் என்னுடைய பெயர் வரவில்லை இது எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது. பிறகு தான் இயக்குனராக ஆகவேண்டும் என்ற முடிவெடுத்து மௌனம் பேசியதே படத்தை இயக்கினேன்” எனவும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.