அடேங்கப்பா! ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரகுல் ப்ரீத் சிங் பெயர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணமே அவருடைய திருமணம் தான். இவர் ஜாக்கி பாக்னானியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவர்களுடைய திருமணம் பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கான அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் கூட திருமண பத்திரிக்கை வெளியாகி இருந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் வருகை தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங் தான் முதன் முதலாக வாங்கிய சம்பளம் குறித்த தகவலை கூறியுள்ளார்.
மிரட்டல் லுக்கில் தனுஷ்! வெளியானது ‘D50’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
இது குறித்து பேசிய அவர் ” ‘நான் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்த நாளில் இருந்து 25 வயசு வருது வரைக்கும் என்னுடைய அம்மா எனக்கு ஆதரவாக இருந்தாங்க. எனது வாழ்க்கை மாடலிங் மூலம் தொடங்கியது. அதனால் நான் வாங்கிய முதல் சம்பளம் ரூ.5 ஆயிரம்.. அங்கிருந்து எனது பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்களால் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
இன்னும் நான் எவ்வளவு பெரிய நிலைமைக்கு சென்றாலும் அவர்களை நான் மறக்கவே மாட்டேன். அவர்கள் என்னுடன் இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் இருந்ததால் பல பிரச்சனைகளில் இருந்தும் நான் வெளியே வந்து இருக்கிறேன்” எனவும் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.