கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா துரைசாமி. இவர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.
இவருடைய புகைப்படமும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து அவருக்கு சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதனால் படத்தின் பிரமோஷன் காக பேட்டிகளில் திவ்யா துரைசாமி கலந்து கொண்டு வருகிறார்.
எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் இளையராஜாவுக்கு தான் மகளா பொறக்கணும் – பவதாரிணி
அந்த வகையில்,சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திவ்யா துரைசாமியிடம் நீங்கள் எப்போது அதிகமாக போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவீர்கள் என்ற கேள்வியை கேட்டார். அதற்கு திவ்யா துரைசாமியும் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடவில்லை.
எப்போதெல்லாம் நான் சோகம் அடைகிறேனோ அந்த சமயம் தான் போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிடுவேன். வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒவ்வொரு சமயத்தில் சோகம் என்பது வரும். அவர்கள் அந்த சோகத்தினை எதாவது செய்து மீண்டு வருவார்கள். நான் அதனைப்போலவே, நான் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறேன்” எனவும் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…