எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கணும்! ஓப்பனாக பேசிய நடிகர் ஜெய்!

actor jai

நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லேபிள் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஜெய் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெய் தனக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என்பது குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” எனக்கு படங்களில் போர் வீரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ராஜமௌலியின் மகதீராவின் (மாவீரன்)  ஃப்ளாஷ்பேக் பகுதியை நான் மிகவும் விரும்பினேன். அதைப் பார்த்ததில் இருந்தே எனக்கு அப்படியொரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று பலமுறை யோசித்து பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி கதைகள் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வருமா என்றும் நான் ஆவலுடன் இருக்கிறேன். அந்த மாதிரி கதைகள் கொண்ட படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது என்றால் கண்டிப்பாகவே நடிப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய் ” நயன்தாராவுடன் நடிக்கும் அனுபவம் குறித்து பேசியுள்ளார். நான் நயன்தாராவுடன் அன்னபூரணி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறேன். இந்த திரைப்படம் முற்றிலும்  பெண்ணை மையப்படுத்திய படமாக இருக்கும். படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்படும்’என கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய் ” காமெடி, எமோஷன் மற்றும் ஆக்ஷன் போன்ற நடிப்பின் பல்வேறு அம்சங்களுக்கு எனது முழுத் திறனையும் வழங்க விரும்புகிறேன். இன்றுவரை நான் பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால்,  எனது எந்த திரைப்படத்திலும்  நான் முழுமையாக நன்றாக நடித்து இருக்கிறேன் என திருப்தி அடையவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்