இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்ம் இந்த ஆண்டு இந்த டிசம்பருடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் யார் யாரென்ற விவரம் குறித்த 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
(IMDb) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 2022-ஆண்டுக்காண பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்திலும், நடிகை சமந்தா 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- ஒரே படத்தில் ஓட்டம் பிடித்த அழகு தேவதைகள்…? இந்த லிஸ்டில் அவங்களும் சிக்கிட்டாங்களே…!
இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்த தனுஷிற்கு இந்த வருடத்தில் மட்டும் வாத்தி, தி க்ரே மேன, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என 4 படங்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு இவரது நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படமும் வெளியாகவுள்ளது.
இவரை போல, இந்த (IMDb) வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகை சமந்தா 5-வது இடத்தை பிடித்துள்ளார். சமந்தாவிற்கு இந்த ஆண்டு காத்து வாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இந்த மாதம் இறுதியில் இவர் நடித்த குஷி திரைப்படமும் வெளியாகவுள்ளது.
(IMDb) 2022 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் :
1. தனுஷ்
2. அலியா பட்
3. ஐஸ்வர்யா ராய்
4. ராம் சரண்
5, சமந்தா
6. ஹ்ரித்திக் ரோஷன்
7. கியாரா அத்வானி
8. என்.டி.ஆர்
9. அல்லு அர்ஜுன்
10. யாஷ்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…