எனக்கு மட்டும் தான் அந்த அதிர்ஷ்டம் நடக்குது! மனம் திறந்த கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி!

meenakshi chaudhary

மீனாட்சி சவுத்ரி : ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி  தற்போது தமிழ் சினிமாவுக்கு எண்டரி கொடுத்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்துள்ளார்.

கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இன்னுமே சில தமிழ் படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் விஸ்வம்பர, மெக்கானிக் ராக்கி, மட்கா உள்ளிட்ட படங்களில் நடிகை  மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய மீனாட்சி சவுத்ரி எனக்கு மட்டும் தான் அந்த அதிர்ஷ்டம் நடக்குது என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அடுத்ததாக நடித்து வரும் படங்கள் எல்லாம் பான் இந்தியா படம் தான்.

இந்த மாதிரி வாய்ப்பு வருவது எனக்கு மட்டும் கடவுள் கொடுத்த அதிர்ஷ்டம்  என்று நினைத்து கொள்வேன். இளம் நடிகர்களில் இருந்து சீனியர்கள் நடிகர் வரை அவர்களுக்கு ஜோடியாக படங்களில் நடிக்க வாய்ப்பு வருவது நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கு அப்படியான வாய்ப்புகள் வருவது ரொம்பவே மகிழ்ச்சி. எனக்கு கிடைத்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு நன்றாக நடிக்க முடியுமோ அப்படியே நடிப்பேன்” எனவும் நடிகை மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth
geetha jeevan About Magalir Urimai thogai