பணம் வேஸ்ட் ஆயிடும் நான் மரத்து மேலயே இருக்கிறேன்! தயாரிப்பாளரை நெகிழ வைத்த விஜயகாந்த்!

Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்யும் தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  ஆனால், அவர் தான் நடிக்கும் படங்களின் பட தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் கூட நஷ்டம் ஏற்பட கூடாது என விரும்புவாராம். இதனாலே, தன்னுடைய  பணத்தில் எடுக்கப்பட்ட படம் என்றால் எந்த அளவிற்கு சிக்கனமாக செலவை குறைக்க முடியுமோ அதைப்போலவே குறைத்துவிடுவாராம்.

குறிப்பாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  விஜயகாந்த் நடிப்பில்  கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கஜேந்திரா’  திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நடிகர் விஜயகாந்த் மரத்தின் மீது கீழே தொங்கிக்கொண்டு சண்டை காட்சி செய்வது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டு வந்ததாம் .

அந்த காட்சியின் போது பல டேக்குகள் போகும் என்பதால் நடித்துவிட்டு நடித்துவிட்டு நடிகர் விஜயகாந்த் அந்த மரத்தின் உடைய கிளைகளில் உட்கார்ந்திருப்பாராம். கிரேன் வழியாக அவர் கீழே இறங்குவதற்காக அங்கு ஒரு வண்டியும் நிறுத்தப்பட்டிருந்ததாம் . ஆனால் நடிகர் விஜயகாந்த் நடித்துவிட்டு அந்த காட்சி சரியாக வரவில்லை என்றால் மீண்டும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு அதனுடைய கிளைகளிலே அமர்ந்து கொண்டு கீழவே இறங்க மாட்டாராம் .

எவ்வளவு மணி நேரம் ஆகியும் கீழே இறங்காமல் நடித்துவிட்டு நடித்துவிட்டு அந்த இடத்திலேயே இருப்பாராம் . பிறகு இயக்குனர் கீழே வாருங்கள் தாமதமாக இந்த காட்சியை எடுத்துக் கொள்வோம் எனக் கூறினால் அதற்கு தாமதமானால் நாட்கள் சென்று கொண்டே இருக்கும் தயாரிப்பாளர் பாவம் இல்லையா ? அவருக்கு பணம் நஷ்டம் எதுவும் வரக்கூடாது நம்மால் அவருக்கு கொடுத்த நாட்களில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும்.

இப்போது நான் கீழே இறங்கினால் திருப்பி மேலே ஏற வேண்டும் திருப்பி கீழே இறங்க வேண்டும் அதற்கே இந்த நாட்கள் எல்லாம் கடந்து விடும் எனவே அதற்கு நான் மேலேயே இருக்கிறேன் முடிந்த அளவிற்கு படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் எனவும் கூறுவாராம். இதனை பார்த்த தயாரிப்பாளரும் அந்த சமயமே மிகவும் வியந்துபோனாராம்.

இந்த தகவலை கஜேந்திரா திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரமேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .மேலும் கஜேந்திரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ஹிட்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்