நா ரெடி! துப்பாக்கி காட்டி மிரட்டும் விஜய்.. லியோ படக்குழு கொடுத்த அதிரடி அறிவிப்பு!

லியோ படத்தின் முதல் சிங்கள் நடிகர் விஜயின் பிறந்தநாளான 22-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து லியோ திரைப்படம், பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டு, தற்போது சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லலித் தயாரித்து வரும் நிலையில், படத்தொகுப்பில் பிலோமின் ராஜ், கலை இயக்கத்தில் சதீஷ்குமார், ஸ்டண்ட் இயக்கத்தில் அன்பறிவ் மற்றும் அனிரூத் இசையில் உருவாகி வருகிறது.
சமீபத்தில், கிட்டத்தட்ட 2000 டான்சர்களுடன் லியோ படத்தின் பிரமாண்டமான பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டது. இந்த சமயத்தில், ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, அன்றைய தினம் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று செய்திகள் வெளியானது. கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு பதிலாக ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இப்படி மாறி மாறி தகவல் வெளியான நிலையில், ready ah? என்று லியோ படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், என்னவா இருக்கும் என ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர். இந்த நிலையில், லியோ படத்தின் Naa Ready என்ற முதல் சிங்கள் நடிகர் விஜயின் பிறந்தநாளான 22- வெளியிடப்படும் என இயக்குனர், நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதுவும், ஒரு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஜய் புதிய தோற்றத்தில் கையில் துப்பாக்கி, வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு ஸ்டைலாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், விஜய் பின்னால் உள்ளவர்கள் கைகளில் மது அருந்தும் கிளாசுகள் வைத்துள்ளனர். மேலும் இந்த போஸ்டரில் Alter Ego என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஒரு மாஸ் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Song update kudukka #NaaReady, Neenga ready dhane? ????#LeoFirstSingle releasing on June 22nd ????#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @trishtrashers @duttsanjay @akarjunofficial @immasterdinesh @SonyMusicSouth #LEO pic.twitter.com/8JOepVnBct
— Seven Screen Studio (@7screenstudio) June 16, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024