கதைக்கு தேவை என்றால் எந்த மாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் : நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் ரெஜினா தற்போது அளித்துள்ள பேட்டியொன்றில், நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆரம்பத்தில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது என்றும், எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன் என்றும், இப்போது நிறைய விஷயங்களை சினிமாவில் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது சினிமா என்ன என்பது நன்றாகவே புரிகிறது என்றும், தமிழில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஒருகில் ஒரு படத்திலும் நடிப்பதாகவும், கதைக்கு தேவை என்றால் எந்தமாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.