வெங்கல் ராவ் : தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் நடிக்க வருவதற்கு முன்பு ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு கடினமான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தவர். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் என பலருக்கும் டூப் போட்டு நடித்து இருக்கிறார்.
ஸ்டண்ட் சீன்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் ஒருமுறை இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க முடியாமல் ஆனது. இதன் காரணமாக காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்து நகரம், கந்தசாமி, தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், நீதி ரீதியாக மிகவும் வறுமையில் இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் இதுவரை காமெடியான காட்சிகளில் நடித்து நம்மளை சிரிக்க வைத்து கொண்டிருந்த அவருக்கு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. சிகிச்சைக்கு தனக்கு உதவி செய்யுங்கள் எனவும் உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் வீடியோவில் பேசியதாவது ” எனக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து விட்டது. என்னால் நடக்கவே முடியவில்லை. சரியாக என்னால் வாயை வைத்து கூட பேசமுடியவில்லை. எனக்கு சினிமா தொழிலார்கள், சினிமா நடிகர்கள் எல்லாம் உங்களால் முடிந்த உதவிகளை எனக்கு செய்யுங்கள். மாத்திரை வாங்குவதற்கு கூட பணம் இல்லை, மருத்துவமனைக்கு செல்ல கூட என்னிடம் பணமில்லை. ரொம்பவே கஷ்டபடுகிறேன்.எனவே எனக்கு உதவி செய்யுங்கள்” என உருக்கமாக பேசியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…