“பிக் பாஸ் போறேன் ஆதரவு கொடுங்க”..கெஞ்சும் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருத்திகா!!
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருத்திகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள். அப்படி தான் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஸ்ருத்திகா பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன்பிறகு அவருக்கு மீண்டும் பெயரைக் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
சமையலில் ஸ்ருத்திகா ஒரு பக்கம் அருமையாகச் செய்து அசத்தினாலும், மற்றோரு பக்கம் தனது குறும்பு தனத்தால் பலருடைய மனதில் இடம்பிடித்தார் என்றே சொல்லலாம். அத்துடன், குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிலையும் அவர் வென்றார். இருப்பினும், பெரிய அளவில் அவருக்குப் பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
சில நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், அதனை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு தற்போது அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை ஹிந்தியில் நடைபெறவுள்ள 18-வது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வீடியோ ஒன்றை நெகிழ்ச்சியுடன் பேசி தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள நடிகை ஸ்ருத்திகா அதில் பேசியிருப்பதாவது ” குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நீங்கள் தனக்குக் கொடுத்த ஆதரவு மிகவும் பெரிதான ஒன்று. அந்த அளவுக்கு ஆதரவு கொடுத்த காரணத்தால் தான் நான் அந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்றேன் . எனவே, உங்களுடைய ஆதரவு ரொம்பவே முக்கியம்.
ஒரு பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொள்ளப் போகிறேன். நான் சொல்லாமலே அது என்ன நிகழ்ச்சி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே, நீங்கள் எனக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று தான் நான் நிகழ்ச்சிக்குச் செல்கிறேன். எனக்கு ஆதரவு கொடுங்கள்” எனச் செல்லமாகக் கெஞ்சி தனது ரசிகர்களிடம் ஆதரவு கேட்டிருக்கிறார் ஸ்ருத்திகா.
இதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சீசனுக்கு செல்லாமல் எதற்காக ஹிந்தி நிகழ்ச்சிக்குச் செல்கிறார் எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருப்பினும், பிக் பாஸ் ஹிந்தி சீசனில் வாய்ப்பு கிடைத்துள்ள காரணத்தால் கண்டிப்பாக நிகழ்ச்சியில் சரியாக விளையாடி கவனத்தை ஈரத்தால் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Actress & CWC winner Shruthika Bigg Boss Poranga ????????????????
Is it hindi or tamil? #BiggBossTamil8 #BiggBoss18
pic.twitter.com/zjOaUib0hN— BB Mama (@SriniMama1) October 5, 2024