அன்பு மகளே..! மறைந்த மகள் பவதாரிணி குறித்து இளையராஜா உருக்கம்

பவதாரிணி மறைவையடுத்து அவரின் தந்தையான இளையராஜா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி (47). பின்னணி பாடகியான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘அழகி’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’ உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். சபரிராஜ் என்பவரை மணமுடித்தார். 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது.

சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இலங்கையில் காலமானார்.
விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது.

இதையடுத்து இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டுஅங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் தனது மகளுடன் இருக்கும் இளம் வயது புகைப்படத்தை இளையராஜா தனது ‘X’ தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பவதாரிணி சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துடன் “அன்பு மகளே” என்ற உருக்கமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா மகள் மறைவு: இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்