ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வரலாறு காணாத வகையில் வசூலை வாரி குவித்து வருகிறது. படம் வெளியாகி 1 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் படம் 550 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை கண்டிப்பாக விஜய் நடித்து வரும் லியோ படம் முறியடிக்கும் என பல விமர்சகரும், ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படத்தால் முறியடிக்க முடியாது எனவும், அப்படியே வசூலை முறியடித்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மீசை ராஜேந்திரன் ” ஜெயிலர் திரைப்படம் வசூலில் பல கோடிகளை செய்து எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது.
ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோ திரைப்படம் முறியடித்துவிட்டால் கண்டிப்பாக நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். 100 % உறுதியாக நான் சொல்வேன் லியோ திரைப்படம் ஜெயிலர் அளவிற்கு வசூல் ஆகாது. ஜெயிலர் படம் 700 கோடி வரை வசூல் போகும் என சொல்கிறார்கள். வசூலில் ஜெயிலர் இதற்கு முன்பு 2.0 படத்தை மிஞ்சும் எனவும் சொல்கிறார்கள்.
இந்த மாதிரி ஒரு சமயத்தில் 400 கோடி 300 கோடி வசூலை தாண்டி லியோ திரைப்படம் வசூல் செய்யாது. நான் அதனை எழுதிக்கொடுத்து ஒரு பேப்பரில் கையெழுத்து கூட போட்டு தருகிறேன்” எனவும் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஒரு படம் வெளியாவதற்கு முன்பே இப்படியெல்லாம் சொல்வது தவறான விஷயம் என கூறி வருகிறார்கள்.
மேலும், வழக்கமாக விஜய் நடிக்கும் படங்கள் வசூல் ரீதியாக 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படி இருக்கும் சமயத்தில் விக்ரம் எனும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜுடன் அவர் இணைந்து லியோ படம் செய்துள்ள காரணத்தால் கண்டிப்பாக படம் வசூல் ரீதியாக ஜெய்லரை மிஞ்ச வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் பல பத்திரிகையாளர்கள் கூறி வருகிறார்கள். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…