சரக்கு இலவசமாக கிடைச்சா தினமும் அடிப்பேன்! ஓபனாக பேசிய நடிகை ஓவியா !
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை ஓவியா தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் பதில் அளித்துவிடுவார். இதன் காரணமாகவே அவருக்கு ரசிகர்கள் கூட்டலாம் ஏராளமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார்.
முதல் கேள்வியாக தினமும் இலவசமாக சரக்கு கிடைத்தால் குடிப்பீர்களா? என தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஓவியா ” தினமும் சரக்கு இலவசமாக கிடைத்தால் சரக்கு அடிப்பேன். அது நல்ல விஷயம் தானே தினமும் 1 கட்டிங் அடிக்கலாம்” என மிகவும் நகைச்சுவையாக பதில் அளித்தார்.
அடுத்ததாக தொகுப்பாளர் ஓவியா குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டதாக தகவல்கள் வருகிறது உண்மையா? என கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கும் பதில் அளித்த ஓவியா ” அப்படியெல்லாம் இல்லை இப்போது எனக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. அப்படி பரவி வரும் தகவல் வெறும் வதந்தியான தகவல் தான்.
நான் சிறிய வயதில் ரொம்பவே அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். இப்போது எனக்கு அது மிகவும் போர் அடித்துவிட்டது. என்னை பொறுத்தவரை நான் ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டேன் என்றால் அதில் இறக்கிவிட்டு பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிடுவேன். என்னுடைய குணம் அப்படி தான். எனவே என்னுடைய மனதில் இப்போது குடிப்பழக்கத்திற்கான எண்ணங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இன்னும் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தை தொகுப்பாளர் கேட்க அதற்கு பதில் அளித்த ஓவியா ” எனக்கு இப்போது திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் இல்லை. அதை பற்றி மற்றவர்கள் எதற்காக கவலைப்படுகிறார்கள் என்பது எனக்கு சத்தியமாக தெரியவில்லை” எனவும் கூறியுள்ளார்.
மேலும் நடிகை ஓவியா கடைசியாக பூமர் அங்கிள் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த படத்திலும் நடிக கமிட் ஆகவில்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ராஜபீமா திரைப்படம் இன்னும் திரையரங்குளில் வெளியாகாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.