மகள் பவதாரிணியின் மறைவைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘என்றும் ராஜா ராஜாதான்’ என்ற இசை நிகழ்ச்சி, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள சுகதத்தாச் உள் அரங்கில் நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்தது. இந்த நிலையில், உடல்நலக் குறைவால் பவதாரிணி நேற்று திடீரென உயிரிழந்ததால், இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தற்பொழுது, பாடகி பவதாரிணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக இளையராஜா இல்லத்தில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…