இருபத்தைந்தாயிரம் பேர் கண்டுகளித்த இளையராஜா இசைக்கொண்டாட்டம்! நன்றி தெரிவித்த விஷால்!!!
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டும், அவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகள் சேர்த்து 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளதை குறிப்பிட்டும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி பிப்ரவரி 2 & 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் என பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கமலஹாசன், இளையராஜா இசையில் சில பாடல்கள் பாடியதும், ஏ.ஆர்.ரகுமானும், இளையராஜாவும் ஒரே மேடையில் ஏறி பேசிக்கொண்டதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது .
இதனை குறிப்பிட்டும் இவ்விழாவை காண வந்த 25,000க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் வந்ததை குறிப்பிட்டும் நடிகர் சங்க செயலரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் டிவிட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
DINASUVADU