இளையராஜா 75 இசைவிழா நடக்காதா ?
இளையராஜா இவரின் பாடல்களை விரும்பாத மக்களே இருக்க முடியாது.இவர் இசைத்துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார்.இவரின் பாடல்கள் கேட்போரை இசை மழையில் நனைக்கும்.இவர் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசைஅமைத்துள்ளார்.மேலும் 5000 பாடல்களை பாடியுள்ளார்.4 தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.
இளையராஜா தனது 75 ஆவது பிறந்தநாளை கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதிக் கொண்டாடினார். இளையராஜாவை பெருமைபடுத்தும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசை விழா ஒன்று பிப்ரவரி மாதம் 2, 3 ஆகியத் தேதிகளில் நடத்தவுள்ளார்கள். அந்த விழா சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்க இருக்கிறது.
தயாரிப்பாளர்கள் சார்பில் பி டி செல்வக்குமார் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.இளையராஜா தயாரிப்பாளர் சங்கத்திற்கு ராயல்டி தொகையாக ரூ 50 கோடிக்கும் மேல் கொடுக்க வேண்டும். இதனை தராமல் நீண்ட நாள்களாக இழுத்தடிப்பதாக இளையராஜா மீது பி டி செல்வக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் இசை விழா நடக்குமா ? நடக்காதா ?என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.மேலும் இந்த இசை விழாவின் டிக்கெட்கள் விற்பனையாகின்றது.