மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜி கணேசன் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் என்றும் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனையடுத்து, அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த படங்களின் காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியீட்டு பிறந்த நாளை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
மேலும், இசையமைப்பாளர் இளையராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் , நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அதில் கூறியதாவது ” பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன் சிவாஜி கணேசன். அதுவும் நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர் அவர் தான்.
உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. அவரை வாழ்த்துவது நமக்குப் பெருமை” என பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சிவாஜியுடன் அவருக்கு மகனாக தேவர் மகன் திரைப்படத்தில் நடித்திருப்பார்.
1992-ஆம் ஆண்டு வெளியான இந்த ‘தேவர் மகன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிக்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படம் காலங்கள் கடந்தும் பேசும் படமாக இருக்கிறது. அந்த அளவிற்கு படத்தில் கமல்ஹாசன், சிவாஜி இருவரும் மிகவும் அருமையாக நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…