வாய்ப்பு கேட்டு தோளை தட்டிய நடிகர்! கடுப்பாகி கேவலமா திட்டி வெளியே அனுப்பிய இளையராஜா!

ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களுக்கும் அவருடைய பின்னணி இசைக்கும் மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் என்ற சாதனையை வைத்துக்கொண்டு இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அன்று அவருடைய இசை எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

இளையராஜா இசையையும் தாண்டி நிஜ வாழ்க்கையில் மிகவும் கோபம் கொண்ட ஒரு மனிதர். ஆனால், தேவையில்லாத விஷயத்திற்கு அவர் அவ்வளவு கோபப்பட்டது இல்லை இசையமைத்துக்கொண்டிருக்கும்போது யாராவது எதாவது செய்து அவரை இசையமைக்கவிடாமல் இருந்தால் மிகவும் கோபப்பட்டுவிடுவார். இதனை அவருடன் பணியாற்றிய பலரும் கூறி நாம் பார்த்திருப்போம் .

அப்படி தான் நடிகர் லிவிங்ஸ்டன் ஒரு முறை இளையராஜாவிடம் கேவலமாக திட்டு வாங்கினாராம். லிவிங்ஸ்டன் நடிக்க வருவதற்கு முன்பு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தாராம். இளையராஜா அந்த சமயம் ஏவிஎம் ஸ்டுடியோவில் தான் இசையமைத்து கொண்டு இருப்பார். எனவே உள்ளே வர அனுமதி கூட கேட்காமல் வேகமாக லிவிங்ஸ்டன் உள்ளே சென்று விட்டாராம்.

இளையராஜா வீட்டு வாசலில் உட்கார்ந்த பாண்டியராஜன்! ஆண்பாவம் படம் உருவான கதை!

அந்த சமயம் ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையும் நடந்து வந்ததாம் அப்போது இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைத்துக் கொண்டு இருக்க பின்புறம் இருந்து லிவிங்ஸ்டன் இளையராஜாவின் தோளை தட்டி எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா ? என்று வாய்ப்பு கேட்டாராம். உடனடியாக இசை அமைத்துக் கொண்டிருந்த இளையராஜா மிகவும் கடுப்பாகி நீ யார் முதலில் உன்னை யார் உள்ளே விட்டார் என கத்தி பேச தொடங்கி விட்டாராம்.

பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவின் ஊழியர்களிடம் இவரை யார் உள்ளே விட்டது அறிவில்லையா? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்ன  சும்மாவா உட்கார்ந்து இருக்கிறேன் உனக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது?  என்பது போல லிவிங்ஸ்டனிடம் மிகவும் கோபத்துடன் இளையராஜா கத்தினாராம். அது மட்டும் இன்றி கேவலமாக திட்டி உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேவும் போக சொல்லிவிட்டாராம்.

கமல் சாரோட நட்பை நானே கெடுத்துட்டேன்! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் லிவிங்ஸ்டன்!

இப்படி கேவலமாக திட்டியவுடம் நடிகர் லிவிங்ஸ்டன் மிகவும் வேதனை அடைந்துவிட்டாராம். பிறகு தனக்குள்ளே வாய்ப்பு கேட்க வந்ததற்கு எதற்காக இப்படி திட்டுகிறார்கள் என யோசித்தாராம். இந்த தகவலை லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு பின் நடிகரான லிவிங்ஸ்டன் இளையராஜா இசையில் சொல்லாமலே, சேட்டை, என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rashid khan - DJ Bravo
TVK Leader Vijay
gold price
India vs England 1st ODI
Rahul Dravid auto drier