சிவாஜிக்கு அரசும் சினிமாவும் செய்யாததை நான் செய்தேன்…மேடையில் கண்கலங்கிய இளையராஜா.!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்றே கூறலாம். இந்நிலையில், சிவாஜியின் மருது மோகன் என்பவர் சினிமாவின் வாழ்க்கையை நூல் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில், இசையமைப்பாளர் இளை யராஜா, பிரபு, விக்ரம் பிரபு, இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அப்போது மேடையில் சிவாஜி கணேசன் குறித்து பேசிய இளையராஜா ” என்னை சிவாஜி கணேசன் அண்ணன் ராஜா என்று சொல்லமாட்டார் ராசா என்று தான் பாசமாக அழைப்பார். எங்க ஊர் பண்ணைபுரத்தில் ஒரு நாடக தியேட்டர் இருந்தது. அப்போது ஒரு நாள் சிவாஜி அண்ணனுடைய தங்கபதக்கம் படம் வெளியான சமயத்தில் வந்திருந்தார். அவர் பேசுவதற்கு என்னுடைய அண்ணன் பாஸ்கர் தான் மைக் செட் வைத்து கொடுத்திருந்தார்.
மைக்கை சரிபார்ப்பது போல பாஸ்கர் சிவாஜியை தொட்டுப் பார்த்தார். அன்று முதல் பாஸ்கருக்கு 3 நாள் கடும் காய்ச்சல். நாங்கள் அப்படி வியப்பாக பார்த்த சிவாஜி அண்ணனோடு நாங்கள் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். ஒரு நாள் நான் பிரசாத் ஸ்டூயோவில் இசையமைத்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென சிவாஜி அண்ணன் வந்தார்.
இதையும் படியுங்களேன்- என் புருஷன் எனக்கு மட்டும் தான் என எதிர்பார்த்தேன்….விவாகரத்து குறித்து மனம் திறந்த சீதா.!
எனக்கு இந்த தகவல் வந்ததும் நான் பதறி அடித்து வெளிய சென்று பார்த்தேன், பிறகு சிவாஜி அண்ணன் உள்ளே வரலாமா ராசா.? என கேட்டார் எனக்கு கண் கலங்கிவிட்டது. அண்ணா என்ன அண்ணா இப்படியெல்லாம் கேட்கறீங்க..? நீங்கள் வருவதற்கு எல்லாம் நான் தவம் கிடந்திருக்கிறேன் என்று கூறினேன். அவருக்கு நான் இசையமைத்த முதல் மரியாதை படத்தில் அவரையே பாடவைத்து புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டேன்.
மேலும், எஸ்.பி.முத்துராமன் சிவாஜி அண்ணாவுக்கு குதிரையில் இருக்கும் சிலை இன்றை பரிசாக வழங்க பல நடிகர்களிடம் இருந்து நிதி திரட்டினார்.என்னிடமும் வந்து ரஜினி, கமல் இவ்வளவு கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் வ்வளவு தருகிறீர்கள் என்று கேட்டார் நான் மொத்தமாக சிலைக்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். அந்த தொகையை முத்துராமன் சொன்னார். மொத்த தொகையும் நானே கொடுத்தேன்.
ஏனென்றால், சிவாஜி அண்ணாவுக்கு கொடுக்கும் பரிசில் யார் பெயரும் இருக்க கூடாது என்று நானே கொடுத்தேன். இது நான் பெருமைக்காக சொல்லவில்லை, நான் அண்ணாவை எவ்வளவு தூரம் நேசித்தேன் என்பதால், இந்த தகவலை கூறினேன். மேலும், சிவாஜி அண்ணாவுக்கு சினிமாவும் , அரசும் எந்த விஷயமும் செய்யவில்லை. அவர்கள் எல்லாம் செய்யதையை செய்தது நான் மட்டும் தான்” என கண்கலங்கி பேசியுள்ளார் இளையராஜா.