மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!

manjummel boys ilayaraja

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் படத்தில், நடிகர் கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை படைத்துள்ளது என்றே சொல்லாம். இப்படி இருக்கையில், அனுமதியின்றி ‘குணா படம் – கண்மணி அன்போடு காதலன்’ பாடலை பயன்படுத்தியதாக கூறி, மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக அனுமதி பெற்று உரிமை பாடலை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில், படத்தின் இசை மற்றும் விளம்பரப் பணிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக 15 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை தயாரிப்பாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடலை பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்புவது இது முதல் முறையல்ல, கடந்த காலங்களில் பல படங்கள் மற்றும் பாடல்களுக்கு இவ்வாறு காப்புரிமை தொடர்பான நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்