இளையராஜா 75 : நிகழ்ச்சியில் விஜய் – அஜித் இருவரில் ஒருவர் பங்கேற்பு..!
சினிமாவில் சாதனை புரிந்து வரும் இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் விதமாக சென்னையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. ஹைலைட் என்னவென்றால் ஏ.ஆர். ரகுமான் வாசிக்க இளையராஜா பாடியது வைரலானது.அதே இடத்தில் இன்று இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சினிமாவில் உள்ள பிரபல கலைஞர்கள் எல்லாம் கலந்துகொள்ள உள்ளார்கள்.
உடனே ரசிகர்கள் எல்லாம் அஜித்-விஜய் கலந்துகொள்கிறார்களா என்ற கேள்வியை எழும்பி வருகின்றனர்.நமக்கு கிடைத்த தகவல் படி இதில் விஜய் கலந்துகொள்வது மட்டும் உறுதியாகிவிட்டது என கூறப்படும் நிலையில் ரஜினி , கமல், சூர்யா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கின்றார்கள்.இதில் அஜித் கொள்வது பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.மேலும் இதில் 17 ஆயிரம் பேர் வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.