இளையராஜா தான் அதுக்கு காரணம்! ராமராஜன் பேச்சு!

Published by
பால முருகன்

சென்னை : மக்கள் தன்னை மறக்காமல் இருக்க இளையராஜா தன்னுடைய படங்களுக்கு கொடுத்த இசை தான் காரணம் என ராமராஜன் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளரும் வந்தவர் ராமராஜன். இவருடைய கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு ராமராஜனின் மார்க்கெட் அந்த சமயம் ரொம்பவே உச்சத்தில் இருந்தது என்றே சொல்லவேண்டும். பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சில ஆண்டுகள் ராமராஜன் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இதனையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் ‘சாமானியன்’ எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரீ -எண்டரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தினை ராஹேஷ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் ராதாரவி, மைம் கோபி எம்.எஸ். பாஸ்கர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று கொண்டு வருகிறது. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக ராமராஜன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் கலந்துகொண்டபோது பேசிய ராமராஜன் இளையராஜா பற்றி பெருமையாக பேசியுள்ளார். இது குறித்து ராமராஜன் பேசியதாவது ” இதனை வருடங்கள் என்னுடைய பெயரை மக்கள் நினைவு வைத்து சொல்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம்  இசையமைப்பாளர் இளையராஜா மட்டும் தான். ஏனென்றால், என்னுடைய படங்களுக்கு அந்த அளவுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

நான் சினிமாவில் 1986-ஆம் ஆண்டு தான் அறிமுகம் ஆனேன். பிறகு 1990 ஆம் ஆண்டு வரை என்னுடைய படங்கள் நன்றாக ஓடியது நான் அந்த சமயம் பீக்கில் இருந்தேன்.  ஆனால் இப்போது வரை மக்கள் மனதில் என்னுடைய பெயர் நிலைத்து நிற்கிறது என்றால்  இசைஞானி இளையராஜா தான் காரணம். என்னைஇன்னும் வரை மக்களுக்கு  நியாகப்படுத்துவதே பாடல்கள் தான்” எனவும் ராமராஜன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

5 minutes ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

30 minutes ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

2 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

4 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

4 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

5 hours ago