இசையமைப்பாளர் இளையராஜா பற்றி சக இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இளையராஜா குறித்து பேசிய அவர் ” இளையராஜாவின் இசையை பற்றி பேச சொன்னால் மணி நேரமாக நான் நிறைய பேசுவேன். ஆனால் ஒரு மனிதராக இளையராஜா ஒரு மட்டமான மனிதர்.
கொஞ்சம் கூட அவருக்கு முதிர்ச்சி இல்லை. ஒரு சாதாரண மனிதராக இருந்தால் இந்த அளவிற்கு விமர்சிக்க கூடிய தேவையில்லை. கடந்த 25 வருடங்களாக சசினிமா துறையில் அவரை பலர் சாமி என்பார்கள். அவருக்கு சாமி என்று பெயர் இருக்கு. பலருக்கும் இது தெரியும். குறிப்பாக ரஜினி சார் கூட அவரை சாமி..சாமி என்று தான் அழைப்பார். அது ஏனென்றால், இளையராஜா அந்த அளவுக்கு அவர் ஆன்மீகத்தில் உள்ளே சென்று பல விஷயங்களை பேசியவர்.
ஆனால், ஆன்மீகத்திற்கு உள்ளே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அசிங்கமாக இளைய ராஜா பேசியவர். உதாரணமாக 1 மாதத்திற்கு முன்பு கூகுளுக்கு அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் இசை சம்பத்தனமான கேள்வி கேட்டதற்கு எல்லாம் கடைசியாக இயேசு கிறிஸ்து வாழ்ந்தாரா, வந்தாரா, உயிர்த்தெழுந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ரமண மகரிஷி ஒருவர்தான் செத்து உயிர்த்தெழுந்தவர் என்று சொன்னார். இதெல்லாம் தேவையா..? ஒரு பண்புள்ள மனிதர் இப்படி பேசுவாரா..?
கோடிக்கணக்கான மக்கள் இயேசுவை விரும்புகிறார்கள். அவர்களை இப்படி சொல்லி காயப்படுத்தணுமா..? இளையராஜா ஒன்னும் வரலாற்று ஆசிரியர் இல்லை, அவர் தன்னுடைய நம்பிக்கையை சொல்ல வருகிறார். எனவே அதை மட்டுமே சொல்ல வேண்டியது தானே அதை விட்டுவிட்டு ஏன் இப்படி பேசவேண்டும்..? ” என மிகவும் கோபத்துடன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவை பற்றி பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இளையராஜாவுக்கு ஆதராகவும், சில ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…