இளையராஜா ஒரு மட்டமான மனிதர்…கடுமையாக விமர்சித்த பிரபல இசையமைப்பாளர்.!

Default Image

இசையமைப்பாளர் இளையராஜா பற்றி சக இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன்  சமீபத்திய பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இளையராஜா குறித்து பேசிய அவர் ” இளையராஜாவின் இசையை பற்றி பேச சொன்னால் மணி நேரமாக நான் நிறைய பேசுவேன். ஆனால் ஒரு மனிதராக இளையராஜா ஒரு மட்டமான மனிதர்.

Ilaiyaraaja and James Vasanthan
Ilaiyaraaja and James Vasanthan [Image Source : Twitter]

கொஞ்சம் கூட அவருக்கு முதிர்ச்சி இல்லை. ஒரு சாதாரண மனிதராக இருந்தால் இந்த அளவிற்கு விமர்சிக்க கூடிய தேவையில்லை. கடந்த 25 வருடங்களாக சசினிமா துறையில் அவரை பலர் சாமி என்பார்கள். அவருக்கு சாமி என்று பெயர் இருக்கு. பலருக்கும் இது தெரியும். குறிப்பாக ரஜினி சார் கூட அவரை சாமி..சாமி என்று தான் அழைப்பார். அது ஏனென்றால், இளையராஜா அந்த அளவுக்கு அவர் ஆன்மீகத்தில் உள்ளே சென்று பல விஷயங்களை பேசியவர்.

James Vasanthan
James Vasanthan [Image Source : Twitter]

ஆனால், ஆன்மீகத்திற்கு உள்ளே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அசிங்கமாக இளைய ராஜா பேசியவர். உதாரணமாக 1 மாதத்திற்கு முன்பு கூகுளுக்கு அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் இசை சம்பத்தனமான கேள்வி கேட்டதற்கு எல்லாம் கடைசியாக இயேசு கிறிஸ்து வாழ்ந்தாரா, வந்தாரா, உயிர்த்தெழுந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ரமண மகரிஷி ஒருவர்தான் செத்து உயிர்த்தெழுந்தவர் என்று சொன்னார். இதெல்லாம் தேவையா..? ஒரு பண்புள்ள மனிதர் இப்படி பேசுவாரா..?

James Vasanthan
James Vasanthan [Image Source : Twitter]

கோடிக்கணக்கான மக்கள் இயேசுவை விரும்புகிறார்கள். அவர்களை இப்படி சொல்லி காயப்படுத்தணுமா..? இளையராஜா ஒன்னும் வரலாற்று ஆசிரியர் இல்லை, அவர் தன்னுடைய நம்பிக்கையை சொல்ல வருகிறார். எனவே அதை மட்டுமே சொல்ல வேண்டியது தானே அதை விட்டுவிட்டு ஏன் இப்படி பேசவேண்டும்..? ”  என மிகவும் கோபத்துடன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவை பற்றி பேசியுள்ளார்.  அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இளையராஜாவுக்கு ஆதராகவும், சில ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்