அஜித் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை….’AK62′ குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
![Thunivu Movie](https://static.muskcdn.com/Dinasuvadu/image/2022/12/Thunivu-movie.jpg)
தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இதையும் படியுங்களேன்- நயன்தாராவுடன் நட்பெல்லாம் இல்ல…போட்டி இருந்தா நல்லது தான்…மனம் திறந்த த்ரிஷா…!
![AK62 Movie](https://static.muskcdn.com/Dinasuvadu/image/2022/11/2022/10/AK62.jpg)
இதற்கிடையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் AK62 படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ” எனது அடுத்த படத்தின் கதையில் எனக்கு முழுவதுமாக சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் எனக்கு அஜித் சார் முதலில் கொடுத்த அறிவுரை.
![Ajith And Vignesh Shivan](https://static.muskcdn.com/Dinasuvadu/image/2022/11/2022/10/Ajith-And-Vignesh-Shivan.jpg)
இது உங்கள் படம் நீங்கள் விரும்பியதை செய்யுங்கள் என்பது மட்டும் தான், இதனால் எனக்கு எந்த வித அழுத்தமும் கிடையாது. பிடித்ததை செய்வேன். எனவே ‘AK62’ திரைப்படம் 100 % என்னுடைய படமாக உருவாகும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)