அத்துமீறி உள்ளே நுழைந்தால் ‘சுடப்படுவீர்கள்’…நடிகை கங்கனா ரனாவத் மிரட்டல்.!
நடிகை கங்கனா ரனாவத் தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் படத்தில் அவருடைய பட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்க பட்டுவிட்டதாக புகைப்படங்களை வெளியீட்டு தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, கங்கனா ரனாவத் தன்னுடைய வீட்டின் முன் வைத்துள்ள பலகை ஒன்று சர்ச்சையை கிளப்பும் வகையில் இருக்கிறது. அந்த பலகையில் அனைவரையும் மிரட்டும் வகையில் வசனம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பலகையில் ” அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பலகையின் புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார். அதில் ” அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள்அப்படியும் சுட்டும் அதில் உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த பலகையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் எதற்காக இப்படி மிரட்டும் வகையில் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.