prabhu ABOUT lcu lokesh [File Image]
நடிகர் பிரபு சமீபத்தில் ஒரு நகை கடை விழாவின் போது கலந்துகொண்ட நிலையில், அதில் லோகேஷ் கனகராஜ் குறித்தும் இப்போது வரும் படங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். கடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் லோகேஷ் கனகராஜ் தற்போது மற்ற படங்களை கனெக்ட் செய்து படங்களை எடுத்து வருகிறார். அந்த மாதிரி ஆரம்ப காலகட்டத்தில் படங்களை இயக்கி யாரவது எடுத்திருந்தால் நீங்கள் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்டனர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் பிரபு ” கண்டிப்பாக ஆரம்ப காலத்தில் எடுத்திருந்தாலும் நடித்திருப்பேன் அப்போது இருக்கும் இயக்குனர்கள் லோகேஷ் மாதிரி இப்போது படம் எடுத்தால் நடித்திருப்பேன்” என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “என் தங்கச்சி படிச்சவா” பாசமலர் ஆகிய படங்கள் எல்லாம் மிக சிறந்த படங்கள்.
அதே மாதிரி பழைய படங்களின் கதைகளை வைத்து தான் இப்போது இருப்பவர்கள் புது கதையாக மாற்றி படங்களை எடுத்து வருகிறார்கள். அதனை மக்களுக்கு வேறு விதமாக காட்டுகிறார்கள். அந்த வகையில், இப்போது தமிழ் திரையுலகத்தில் இருக்க கூடிய கலைஞர்கள் எல்லாம் மிகவும் சிறந்தவர்கள்.
இப்போது இருக்கும் கலைஞர்களை பம்பாய், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என எல்லா மொழிகளிலும் புகழ்ந்து பேசுகிறார்கள். அந்த அளவிற்கு அருமையான படம் எடுக்க கூடிய இயக்குனர்கள், நடிகர்கள் என பல கலைஞர்கள் நம்மளுடைய தமிழ் சினிமாவில் இருப்பது மிகவும் பெருமை பட கூடிய ஒன்று” என பிரபு கூறினார்.
அதன்பிறகு சந்திரமுகி 2 படம் பார்த்தீர்களா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த பிரபு ” அவர்களால் முடிந்த அளவிற்கு படத்தை நன்றாக எடுத்திருக்கிறார்கள். ஒரு அளவு படம் நன்றாக இருக்கிறது. இந்த படத்தை என்னுடைய நண்பர் வாசு எடுத்து இருக்கிறார். அவர் என்னை வைத்து பல படங்களை இயக்கி இருக்கிறார். அவர் என்ன படம் எடுத்தாலும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்” என கூறினார். மேலும், சந்திரமுகி 1 படத்தில் பிரபு செந்தில்நாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…