நல்ல கதையை நம்பி படம் எடுத்தால் மக்களை சேரும்…’அயோத்தி’ இயக்குனர் நம்பிக்கை.!
இயக்குனர் மந்திர மூர்த்தி என்பவர் இயக்கத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, போஸ் வெங்கட், புகழ் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’.. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் இந்த திரைப்படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும், இந்த திரைப்படம் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘அயோத்தி’ திரைப்படத்தின் இயக்குனர் மந்திர மூர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில் ” இந்த திரைப்படம் முதலிலே ஹிட் ஆகும் என எனக்கு தெரியும். நல்ல கதையம்சத்தை கொண்ட படம் எடுத்தால் கண்டிப்பாக மக்களை சேரும். இந்த திரைப்படத்தில் அம்மா, அப்பா, மகள், மகள், கணவன், மனைவி, அக்கா , தம்பி, எல்லோருக்குமான எமோஷனல் காட்சிகள் இருக்கு.
இந்த படத்தின் கதை அயோத்தியில நடைபெறுகிறது. எனவே, படத்தில் இந்தி நடிகர்கள் சிலர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். எனவே, இந்தி நடிகர் யஷ்பால் சர்மா வந்தார். ஹீரோயினா நடிச்சிருக்கிற பிரீத்தி அஸ்ரானி நடித்தார்கள். “என கூறியுள்ளார்.