ஒழுங்கா நடிக்கலைனா அடிப்பாரு! மம்முட்டி குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்?

mammootty

சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி. இவருக்கு 72 வயது ஆகியும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அழகுடன் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். தமிழுலும் கூட மம்முட்டி பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தனக்கு மனதிற்கு படும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார்.

இதனை நாம் அவர் பேட்டிகளில் கலந்துகொண்டபோதும் விருது வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதும் கூட நாம் பார்த்திருப்போம். ஆனால், யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று தற்போது வெளிவந்து இருக்கிறது. அது என்னவென்றால், மம்முட்டி சரியாக நடிக்கவில்லை என்றால் படப்பிடிப்பு தளத்தில் வைத்தே அடித்துவிடுவாராம்.

அதைப்போல காட்சி எடுக்கும்போது சரியாக நடிக்கவில்லை என்றாலும் கூட வாய்க்கு வந்தபடி திட்டியும் விடுவாராம். அப்படி தான் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது பாவா லட்சுமணன் அவருடன் நடிக்கும்போது முதன் முதலாக அவரை பார்த்தபோது இவன் யாரு பன்னிக்குட்டி மாதிரி இருக்கான் என்று கேட்டாராம். இதனால் அவருடன் நடிக்கவே பாவா லட்சுமணன் பயந்தாராம்.

பிறகு மம்முட்டி நான் அவனை வைத்து ஒரு காட்சி எடுக்கிறேன். அந்த காட்சியில் அவன் நடித்தால் நான் அவனை எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினாராம். பாவா லட்சுமணன் அந்த காட்சியில் நன்றாக நடித்த நிலையில், அவருக்கு மம்முட்டி அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம். இந்த தகவலை பாவா லட்சுமணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்