நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் இயக்குநர்களில் அஷ்வத் மாரிமுத்து ஒருவராக மாறிவிட்டார். ஓ மை கடவுளே படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் படத்திலே இளைஞர்களை கவர்ந்து தானும் ஒரு சிறந்த இயங்குநர் என்பதை காட்டிவிட்டார்.
அது மட்டுமின்றி தன்னை நம்பி பணம் செலவு செய்து படங்கள் எடுக்கும் தயாரிப்பாளருக்கும் நஷ்டம் இருக்காது என்கிற வகையில், அந்த படத்தை இயக்கியதோடு தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய லாபத்தையும் பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் தொகை எவ்வளவு என்றால் ரூ.3 கோடி. படம் உருவான சமயத்தில் இந்த பணத்தை மீட்டெடுக்குமா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், படம் அமோகமாக ஓடி உலகம் முழுவதும் மொத்தமாக 30 கோடிகள் வரை வசூல் செய்தது.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனமும் மாஸ்டர் பிளான் செய்து தங்களுடைய தயாரிப்பில் அவரை ஒரு படம் இயக்க கூறியது. உடனடியாக அவர் ஏற்கனவே பிளாக் பஸ்டர் 100 கோடி வசூல் படம் கொடுத்த பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தினை இயக்கவும் செய்தார். படமும் வெளியாகி பெயருக்கு ஏற்றத்தை போல மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி எமோஷனலில் உருக வைத்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
அமோக வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாகவே படம் வசூல் ரீதியாக 10 நாட்களில் 100 கோடி வசூல் செய்து இந்த ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. இந்த படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் தொகை ரூ.37 கோடி தான். ஆனால், வெளியான 10 நாட்களிலே 100 கோடி வசூலை கடந்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.
தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவின் 51-வது படத்தினை இயக்கவுள்ளார். இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்து லாபம் கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.