தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இதற்கிடையில், பீஸ்ட் படத்தில் செல்வராகவன் தேர்வு செய்தது குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் “தற்போது செல்வராகவன் சார் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதை கேள்விபட்டவுடன் தான் பீஸ்ட் படத்தில் அவரைத் தேர்வு செய்தோம். அவர் படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் நேரில் சென்று எனக்கு கேட்கக்கூட தைரியம் வந்திருக்காது.
அவரை வைத்து பத்து நாள் தான் படப்பிடிப்பு நடத்தினோம் . ஆனால் அவர் படம் முழுவதும் வருவார் ஒரு வார்த்தைக்கூட படப்பிடிப்பின் போது பேச மாட்டார். அவர் மிகப்பெரிய இயக்குனர். ஆனால் அந்த சிந்தனையே அவருக்கு இருக்காது. நடிக்க ஆரம்பித்துவிட்டால் நடிகராகதான் இருப்பார்.
ஒரு சீனை குறைக்கலாம் , மாற்றலாம், என்று எதுவுமே சொல்ல மாட்டார். அவருடைய கதாபாத்திரமும் படத்தில் அருமையாக இருக்கும்விஜய் சாரும் செல்வா சார் கதாபாத்திரம் நல்லா இருக்கு என்று கூறினார்.” என நெல்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…
லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல்…
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…