அதிர்ஷ்டம் என்றால் இது தான்…பூஜா ஹெக்டேவுக்கு குவியும் தமிழ் படங்கள் வாய்ப்பு.!

Default Image

நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து சமீபத்தில் வெளியான ராதே ஷியாம், பீஸ்ட் , ஆச்சார்யா, F3, சர்க்கஸ் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதனால் அவருக்கு மார்க்கெட் குறையும், பட வாய்ப்புகள் குறையும் என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தனர்.

Pooja Hegde
Pooja Hegde [Image Source : Google ]

ஆனால், அவருக்கு தமிழில் தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். ஒரு திரைப்படம் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகவுள்ள, பையா 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. எனவே இரண்டாவது பாகம் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் பூஜா ஹெக்டே நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.

arya pooja hegde
arya pooja hegde [Image Source : Google ]

அதை போல மற்றோரு திரைப்படம் எதுவென்றால், சுந்தர் சி-யின் கனவு திரைப்படமான சங்கமித்ரா திரைப்படம் தான். இந்த திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.  எனவே தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தாலும்  கூட இரண்டு பெரிய தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது அவர்களுடைய ரசிகர்களை உற்சாகப்படுதியுள்ளது.

Pooja Hegde in Sangamithra
Pooja Hegde in Sangamithra [Image Source : Google ]

மேலும் பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தியில் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படத்திலும் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்