லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி மற்றும் சில அட்வைஸ்களையும் வழங்கினார். இந்த விழாவில் பேசி முடிப்பதற்கு முன்பாக விஜயிடம் பல கேள்விகளும் கேட்கப்பட்டது.
அந்த கேள்விகள் அனைத்திற்கும் விஜய்யும் பதில் அளித்தார். குறிப்பாக தொகுப்பாளினி டிடி ” 2026 என சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்வியை சூசகமாக விஜியிடம் கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் சிரித்துக்கொண்டே உலகக்கோப்பை கால் பந்து போட்டி பற்றி கேட்கிறீர்களா? என கேட்டுவிட்டு “கப்பு முக்கியம் பிகிலு” என முடித்தார்.
இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!
அதற்கு பிறகு அடுத்த கேள்வியாக ‘லோகேஷ் கனகராஜ் 10 படங்கள் முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகுவதாக கூறியிருக்கிறார். அப்படி 10 படங்கள் அவர் இயக்கி முடித்த பிறகு உங்களுடைய கட்சியில் சேர்ந்தால் அவருக்கு எந்த மாதிரி ஒரு பதவியை நீங்கள் கொடுப்பீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அந்த கேள்விக்கு பதில் கூறிய விஜய் ” ஒரு கற்பனையாக தான் கேட்டிருக்கிறீர்கள் அதனால் நான் சொல்கிறேன். என்னுடைய கட்சியில் அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மந்திரி பதவி கொடுக்கலாம்” என கலகலப்பாக பதில் அளித்து விட்டு சிரித்தார். கீழே இருந்த லோகேஷ் கனகராஜும் வெட்கப்பட்டு கொண்டே சிரித்தார். அரங்கில் இருந்த ரசிகர்களும் வயிறு குலுங்க சிரித்தார்கள்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…