கொட்டுக்காளி ஹிட் ஆச்சுன்னா இதை கண்டிப்பா பண்ணுவேன்! சிவகார்த்திகேயன் உறுதி!

Published by
பால முருகன்

சென்னை : “கொட்டுக்காளி” படம் வெற்றி பெற்று நல்ல லாபம் கிடைத்தால், வினோத் போன்ற பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பதில் ஒரு பக்கம் ஆர்வம் செலுத்துவது போல மற்றோரு பக்கம் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் சூரியை வைத்து ‘கொட்டுக்காளி’ என்கிற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தினை கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார்.

கூழாங்கல் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘கொட்டுக்காளி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் ” கூழாங்கல் படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் வினோத்ராஜ் போன்ற திறமையான ஆட்களை வெளியே தெரியப்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். எனவே, அவரின் அடுத்த படத்தை கதை கூட கேட்காமல் நான் தான் தயாரிப்பேன் என்ற முடிவோடு தயாரித்துள்ளேன். இந்த கொட்டுக்காளி திரைப்படம் தொடங்கப்பட்டதுக்கு ஒரே ஒரு காரணம் வினோத்ராஜை கொண்டாடுவதற்கு மட்டும் தான்.

மற்றபடி படத்தின் கதை, பட்ஜெட், எவ்வளவு என்பதுகூட எனக்கு தெரியாது. முதலில் கதை சொல்லும்போதே நான் இயக்குனரிடம் சொல்லிவிட்டேன் என்னிடம் முழு கதையை சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் அதில் மாற்றம் செய்ய சொல்லி பேச்சு வரும். எனவே, கதை சொல்லவே வேண்டாம்…உங்களுக்கு என்ன எடுக்கணும்னு தோணுதோ அதை அப்படியே எடுங்க என்று சொன்னேன்.

கண்டிப்பாக இந்த படம் வெற்றியடைந்தது என்றால் அதில் வரும் பணத்தை எடுத்து அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் ஆக கொடுப்பேன். அதைப்போல இன்னும் படத்திற்கு இலாபம் கிடைத்தது என்றால் வினோத் ராஜை போலவே, வேறு எங்கும் இயக்குனர்கள் இருந்தால் அவரை தேடி அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து வாய்ப்பு வழங்குவேன்.

சினிமாவில் சம்பாதிக்கிற மாதிரி படம் எடுப்பது என்பது மிகவும் முக்கியம். ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் பணம் போட்டு அதனுடைய லாபத்தை எடுக்க வேண்டும். எனக்கு நீங்கள் நடிகன் என்று அங்கீகாரம் கொடுத்து ஸ்டார் ஆக்கி என்னுடைய படத்தின் வியாபாரத்தை மிகவும் பெரிதாக்க உதவி இருக்கிறீர்கள்.

அப்படி சம்பாதித்த பணத்திலிருந்து சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நான் படங்களை தயாரித்து வருகிறேன்” என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் பேசியதை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுடைய மனசு தங்கம் தான் சார்’ என அவரை பாராட்டி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago